கட்டாய காணொளியால் இந்தியர்கள் கொதிப்பு

புதுடெல்லி: இந்திய விமானி அபிநந்தனை விடுவிப்பதற்கு முன்பு அவரைக் கட்டாயப்படுத்தி காணொளி ஒன்றைப் பதிவு செய்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டதாகக் கூறப்படுவதால் இந்திய மக்கள் கொதிப்படைந் துள்ளனர்.
சனிக்கிழமை மாலை 4 மணிக்கு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபி நந்தன்  ஒப்படைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலை யில் அன்று இரவு 9 மணிக்குத் தான் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய அதிகாரிகளிடம் அபி நந்தன் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு அவரிடம் பாகிஸ்தான் ராணுவம் வீடியோ  மூலம் வாக்குமூலம் பதிவு செய்து அதை வெளியிட்டது.
இதனால் பாகிஸ்தான் ராணு வத்தின் வற்புறுத்தலின் பெயரில் அவர் காணொளியில் பேசினாரா என்பது தெளிவாகத் தெரிய வில்லை. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அந்தக் காணொ ளியை பாகிஸ்தான் அரசு உள்ளூர் ஊடகங்களுக்கு வெளியிட்டது.
காணொளியில், “பாகிஸ்தான் வான்வெளிக்குள் நான் இலக்கை நோக்கிப் பறந்தபோது என்னுடைய விமானம் பாகிஸ்தான் விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப் பட்டது. அதன்பின் விமானத்தில் இருந்து வெளியே பறந்த நான், பாரசூட் மூலம் குதித்தேன்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்களும் மாணவர்களும் தலையில் கட்டுப் போட்டுக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: இபிஏ

15 Jun 2019

நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்