மாயாவதி: நானும் பிரதமர் வேட்பாளர்

லக்னோ: உத்தரப் பிரதேச நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடா விட்டாலும் தானும் ஒரு பிரதமர் வேட்பாளர் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக எதிரும் புதிருமாக இருந்த சமாஜ் வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கைகோத்து போட்டியிடு கின்றன. 
ஆனால் நாடாளுமன்றத் தேர்த லில் போட்டியிட மாட்டோம் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வும் அறிவித்துள்ளனர்.
இதனால் இரு கட்சிகளின் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள் ளனர். இந்த நிலையில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் ஆறு மாதங்களில் நாடாளுமன்ற உறுப் பினராக வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய மாயாவதி, தொண்டர்கள் சோர்வு அடைய வேண்டாம் என்றார்.