ராணுவ வீரர் சுட்டு சக வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி சுட்டதில் இரு வீரர்கள் மாண்டனர்.
கடந்த மாதம் பயங்கரவாதத் தாக்குதலில் எல்லைக் காவல் படையைச் சேர்ந்த நாற்பது வீரர்கள் பலியான அதே இடத்தில் வன்முறை வெடித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்ரீநகரிலிருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதம்பூர் முகாமில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் சக வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக போலி சார் கூறினர்.
“அந்த வீரர் தன்னையும் சுட்டுக்கொண்டார். மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. போதையில் அவர் சக வீரர்களை சுட்டிருக்கலாம்,” என்று ஜம்மு போலிஸ் அதிகாரி எ.கே. சின்ஹா கூறினார்.
மற்றொரு சம்பவத்தில் ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே ஜம்மு காஷ்மீரின் சோபார் மாவட்டத்தில் காவல்துறையை நோக்கி கையெறி குண்டுகள் வீசப்பட்ட தாக காவல்துறையினர் கூறி னர்.
 இதில் மூன்று காவல்துறை அதிகாரிகள் காயம் அடைந் தனர்.