சுடச் சுடச் செய்திகள்

‘ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க ராகுல் மறுத்துவிட்டார்’

விசாகப்பட்டினம்: நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி மறுத்துவிட்டதாக டெல்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரி வித்தார். நாடாளுமன்றத் தேர்த லில் காங்கிரசும் ஆம் ஆத்மியும் கூட்டணி அமைக்கும் என்ற எதிர் பார்ப்பு நிலவியது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி யுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவேண்டும் என ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரி வால் வலியுறுத்தினார். இதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந் தியை அவர் சந்தித்து பேசினார். ஆனால் அவரது முயற்சி பலிக்க வில்லை. இந்த நிலையில் விசாகப் பட்டினத்திற்கு நேற்று வந்த கெஜ்ரிவால், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, கூட்டணிக்காக தன்னை கெஜ்ரிவால் அணுக வில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ‌ஷீலா தீட்சித் கூறியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த கெஜ்ரி வால், “நாங்கள்  ராகுல் காந்தியை சந்தித்தோம். அவரைவிட ‌ஷீலா தீட்சித் முக்கியமான தலைவர் அல்லர்,” என்றார். கூட்டணி விஷ யத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு ‌ஷீலா தீட்சித்தும் மற்ற மூன்று செயல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மே 12ஆம் தேதி தேர்தல் நடை பெறுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon