தேர்தல்: சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் பொய் செய்திகள்

மும்பை: தேர்தல் நேரத்தில் போலிச் செய்திகள் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்க சமூக ஊடக நிறுவனங்களும் பல நடவடிக் கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் அவி தாண் டியா என்ற ஃபேஸ்புக் பயனாளி ஒருவர் உள்துறை அமைச்சர், பாஜக தலைவர், அடையாளம் தெரியாத பெண் என மூவரும் உரையாடும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், அவர்கள் "தேர்தல் நேரத்தில், போர் தேவை என்பதை ஒப்புக் கொள்கிறோம்," என்று இந்தி மொழியில் பேசுவது போல் உள்ளது.
ஆனால் காணொளி வெளி யான 24 மணி நேரத்தில் அது பொய் என்பதை ஃபேஸ்புக்கின் உண்மை கண்டறியும் பங்காளி நிறுவனமான 'பூம்' கண்டறிந்தது என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி.
அந்தக் காணொளியை ஃபேஸ் புக்கில் இருந்து அகற்றுவதற்குள் கிட்டதட்ட 2.5 மில்லியன் பேர் பார்வையிட்டுவிட்டனர். அது 150,000 முறை பகிரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23ஆம் தேதி இந்தக் காணொளி வெளியான பிறகு தாண்டியா ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தவில்லை.
பொய் செய்தி பரவுவதற்கு எதிராக இந்தியாவில் கடும் சட் டங்கள் இல்லையென்றாலும் தாண் டியா மீது மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 11ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற வுள்ள நிலையில், பொய்ச் செய்திகள் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, பாஜகவிற்கு 'நமோ அப்' தயாரித்த 'சில்வர்டச்' நிறுவனம் தொடர்புடைய 15 பக் கங்களை ஃபேஸ்புக் நீக்கியுள்ளது.
இந்தப் பக்கங்கள் உள்ளூர் செய்திகள், அரசியல் நிகழ்வுகள், இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கட்சிகளின் நடத்தை குறித்தும் பதிவிட்டு வந்துள்ளன. இப்பக்கங்கள் நம்பகத்தன்மையில் லாத முறையில் செயல்பட்டதால் இவற்றை ஃபேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளது.
முன்னதாக காங்கிரசுக்கு ஆத ரவான 687 ஃபேஸ்புக் பக்கங்கள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதை 2.6 லட்சம் பேர் பின் தொடர்ந்தனர்.
பாஜக ஆதரவு ஃபேஸ்புக் பக் கங்களை 26 லட்சம் பேர் பின் தொடர்ந்ததால் பாஜகவிற்குதான் இது பெரும் பின்னடைவாக இருக்கும் என்கிறது என்டிடிவி செய்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!