விவசாயிகளுக்கான காங்கிரசின் தேர்தல் அறிக்கை

புதுடெல்லி: விவசாயிகளுக்கு புத் துயிர் அளிக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது காங்கிரஸ்.
வரும் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் கள் சோனியா காந்தி, ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் தேர்தல் அறிக் கையை வெளியிட்டனர்.
விவசாயத்திற்குத் தனி வரவு செலவுத் திட்டம், பயிர்க்கடனைத் திரும்பச் செலுத்தாத குற்றம் கிரிமினலில் இருந்து சிவிலாக மாற்றப்படும் என்று அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவப் படிப்பு களுக்குப் பொது நுழைவுத் தேர்வை விரும்பாத மாநிலங்களில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் 4 லட்சம் அரசாங்கப் பணியிடங் கள் காலியாகும். அவை அனைத் தும் 2020 மார்ச் மாதத்துக்குள் நிரப்பப்படும்.
புதிதாகத் தொழில் தொடங்கும் தொழில்முனைவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை யோடு தொழில் தொடங்க அனு மதிக்கப்படுவார்.
ஏழை குடும்பங்களுக்குக் குறைந்தபட்ச வருமானத்தை உறுதிச் செய்யும் வகையில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நிதியுதவி அளிப்பது.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், கல்விக்காக நாட்டின் ஜிடிபியில் இருந்து 6 விழுக்காடு ஒதுக்கீடு, ஜிஎஸ்டி மறுஆய்வு, மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மத்திய அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கை வெளியீட் டிற்குப் பின்னர் ராகுலிடம் செய்தி யாளர்கள் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், "தென்னிந்தியாவை மத்திய அரசு புறக்கணிப்பதாக அப்பகுதி மக் கள் நினைப்பதாலேயே தென்னிந்தி யாவில் போட்டியிடுகிறேன்.
"தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதைக் காட்டவே கேரளாவில் போட்டியிடு கிறேன்," என்றார்.

விவசாய வரவுசெலவுத் திட்டம், ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானம் உள்ளிட்ட உறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் வெளியிட்டனர். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!