சுடச் சுடச் செய்திகள்

கூலிப்படையை ஏவி மகனை  கொன்ற தாய் தலைமறைவு

ஹைதராபாத்: கூலிப்படையை ஏவி பெற்ற மகனை தாயே கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு போலிசார் இக்குற்றச் செயலை கண்டுபிடித்துள்ளனர். சைபராபாத்தைச் சேர்ந்தவர் மசூதா பீ. இவரது மகன் முகமது காஜா. எந்த வேலைக்கும் செல்லாத இவர், போதை, சூதாட்டம் உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் தனது தாயிடமும் குடும்பத்தாரிடமும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனம் வெறுத்துப்போன மசூதா, ஒரு கட்டத்தில் மகனைக் கொலை செய்வது என முடிவு செய்தார். இதையடுத்து தனது மருமகன்கள் ர‌ஷீத், ப‌ஷீர், ஆட்டோ ஓட்டுநர் ஹாஷம் ஆகியோருடன் சேர்ந்து மகனைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார் மசூதா. அதன் முடிவில் கடந்த 2001ஆம் ஆண்டு ஜூன் மாதம் காஜாவை கள் குடிக்கலாம் என்று கூறி இம்மூவரும் அழைத்துச் சென்று கொலை செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலிசார், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மூவரையும் கைது செய்துள்ளனர். மசூதா தலைமறைவாகி உள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon