சென்னை: சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீ விபத்து பாஜக, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போரை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஃபேல் பேர ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோப்புகளை அழிப்பதற்காக இந்த தீ விபத்தை சிலர் திட்டமிட்டு நடத்தி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஆனால் பாஜக இக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சாஸ்திரி பவனில் மத்திய அரசின் ஏராளமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

