வினையான விளையாட்டு:  உயிரை பறித்த கொண்டாட்டம்

பெங்களூரு: பிறந்தநாள் கொண் டாட்டம் என்ற பெயரில் அடித்து உதைத்து விளையாடியதால் பெங் களூருவில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரி விடுதியில் மனோஜ் சுட்கே என்ற மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடை பெற்றது.

அப்போது கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சக மாணவர்கள் மனோஜ் சுட்கே என்ற அந்த மாணவரை அடிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அதில் மனோஜ் சுட்கேவை எட்டி உதைப்பது, விலா எலும்பில் குத்தும் காட்சிகள் பதிவாகியுள் ளன. அதே நேரத்தில், சில வினாடிகளில் அடிவாங்கிய அந்த மாணவர் எழுந்துச் செல்கிறார்.

'பர்த்டே பம்ப்ஸ்' என்ற பெயரில் விளையாட்டாக சக மாணவர்கள் மனோஜ் சுட்கேவை அடித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், மறுநாள் அவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பயங்கர வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் நடைபெற்று உள்ளது. ஆனால், கணையம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேர்ந்தது.

பிரேத பரிசோதனையில் மாண வரின் உடலில் ரத்தக்கசிவு ஏற் பட்டு உயிரிழப்பு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் நடந்து 2 மாதங் கள் ஆன நிலையில், அந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து சதாசிவ நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!