பொருளாதார நிலை: ப.சிதம்பரம் கவலை

பொருளாதார நிலை: ப.சிதம்பரம் கவலை

2 mins read

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டின் அரசியல் சாசனத்தையே அவ மதித்து வருவதாக பிரதமர் நரேந் திர மோடி குற்றம்சாட்டி உள்ளார். விரக்தியின் வெளிப்பாடாக அவர் இவ்வாறு நடந்து கொள்வதாக பிரசாரக் கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் கோபிபல்லவ்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, நரேந்திர மோடியை தாம் பிரதமராக கருதவில்லை என்றார். மேலும் புதிய பிரதமர் பதவியேற்ற தும் அவருடன் அனைத்தையும் பேசுவது என முடிவெடுத்திருப்ப தாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நரேந்திர மோடி பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது, தம்மை பிரதமராக ஏற்காத மம்தா பானர்ஜி, பாகிஸ்தான் பிரதமரையே தமது பிரதமராக கருதுகிறார் போலும் என்றார்.

"மேற்கு வங்கத்தை புயல் தாக்கிய போது தீதியை (மம்தா) நான் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்தேன். ஆனால் தனது கர்வத்தின் காரணமாக என்னுடன் பேசுவது சரியாக இருக்கும் என்று அவர் நினைக்கவில்லை.

"தீதி என்னை அறைய வேண்டும் என்று விரும்பியதாகக் கேள்விப்பட்டேன். நான் உங்களை மதிக்கிறேன். நீங்கள் அறைவது கூட எனக்கு ஆசீர்வாதமாக இருக்கும். அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன்," என்றார் பிரதமர் நரேந்திர மோடி.

அண்மைய பிரசாரத்தின் போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை கொள்ளைக்கூட்டம் என்று மோடி விமர்சிக்கும் போதெல்லாம் அவருக்கு ஜன நாயக ரீதியில் அறை கொடுக்க வேண்டும் எனத் தோன்றும் என மம்தா கூறியிருந்தார்.