58 குடும்பப் பெண்களை சீரழித்த இளையர் கைது

கோட்டயம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் எட்டுமானூர் அருகே உள்ள அரீபரம்புப் பகு தியைச் சேர்ந்தவர் பிரதீஷ் குமார், 25. இவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பிரதீஷ் குமாரை போலிசார் கைது செய்தனர்.

பிரதீஷ் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் போலி சாரே அதிர்ச்சி அடையும் தகவல் கள் கிடைத்துள்ளன. ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் குடும்பத்தலைவி களைக் குறிவைத்து பிரதீஷ் குமார் தனது பாலியல் செயல்களை அரங்கேற்றியுள்ளார்.

குடும்பப் பெண்களிடம் நட்பு அழைப்புகள் கொடுத்து ‘சாட்டிங்’ மூலம் பேசத்தொடங்குவார். பின் னர், நைசாகப் பேசி அவர்களைத் தனது வழிக்குக் கொண்டு வந்து அவர்களின் கைபேசி எண்ணை யும் வாங்கிவிடுவார்.

எனினும், தனது பாலியல் வலையில் பெண்கள் விழவேண்டு மானால் அதற்கு கூடுதல் மோசடி கள் செய்யவேண்டும் என்பதால் வேறு ஒரு செயலையும் பிரதீஷ் குமார் செய்துள்ளார். அது, அவர் களின் குடும்பத்தில் பெரிய விரி சலை ஏற்படுத்துவதுதான்.

பெண்களிடம் சாட்டிங் செய்யும் போது அவர்களின் குடும்பத்தில் இருக்கும் சிறுசிறு பிரச்சினை களையும் பலவீனங்களையும் பிர தீஷ்குமார் கேட்டுத் தெரிந்து கொண்டு, பின்னர் அதனைப் பெரிதாக மாற்றுவார்.

ஃபேஸ்புக்கில் பெண்கள் பெய ரில் போலி கணக்கு தொடங்கி, தான் பழகும் பெண்களின் கண வர்களை அந்த போலி கணக்கு மூலம் மடக்கி, ‘சாட்’ செய்வார். கொஞ்சம் கிளுகிளுப்பாகவே பேசி பெண்களின் கணவர்களை ஏமாற்றுவார். பின், அந்த ‘சாட்டிங்’ கை ‘ஸ்க்ரீன் ஷாட்’ எடுத்து சம் பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி, “பாருங்கள் உங்களது கணவர், மற்ற பெண்களிடம் எப்படி ஆபாச மாகப் பேசியுள்ளார்?,” என்று அந்தப் பெண்ணை தனது வழிக்கு முழுவதுமாகக் கொண்டுவந்து விடுவார்.

பெண்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்ட பிறகு, அவர்க ளிடம் காணொளி மூலம் பேசி தமது அடுத்தக்கட்ட வேலைகளை பிரதீஷ் செய்வார். அந்த காணொளி உரையாடலை குரல்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் படத் தை ஆபாசப்படத்துடன் இணைத்து ‘மார்ஃபிங்’ செய்துள்ளார்.

உண்மையான புகைப்படம் போலவே இருக்கும் அதனை அந்தப் பெண்களுக்கு அனுப்பி, தமது விருப்பத்துக்கு இணங்கு மாறு வலியுறுத்துவார். அவர்கள் மறுத்தால் ‘புகைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடு வேன், கணவருக்கு அனுப்பி வைப்பேன்’ என்று கூறி மிரட்டவும் செய்துள்ளார்.

இதனால், பயத்தின் உச்சிக்குச் செல்லும் பெண்கள் பிரதீஷ் குமா ரின் விருப்பத்துக்கு இணங்கி யுள்ளனர். இப்படி 58 குடும்பப் பெண்களின் வாழ்க்கையை பிரதீஷ் குமார் சீரழித்துள்ளார்.

தங்களது எதிர்கால வாழ்க் கையும் பாழாகிவிடுமே என்ற அச் சத்தில், பாதிக்கப்பட்ட பெண்கள் போலிசில் புகார் அளிக்கவில்லை. ஆனால், ஒரு பெண் தைரியமாக முன்வந்து புகார் அளித்துள்ளதால் பிரதீஷ் குமார் போலிசில் சிக்கி யுள்ளார். கைதான பிரதீஷ் குமா ரின் கைபேசி, மடிக்கணினி ஆகிய வற்றை போலிசார் சோதனையிட்ட தில் பல பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் சிக்கியுள்ளன. இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!