ஆந்திராவில் 25 அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம்

ஹைதராபாத்: நாட்டிலேயே முதன் முறையாக ஒரு மாநிலத்திற்கு ஐந்து துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐவரும் ஆந்திராவில் முதன்முறை யாக ஆட்சியமைத்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவ ரான முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளார் ஜெகன்மோகன். இதையடுத்து அவரது அமைச்சரவை நேற்று பதவியேற்றுக்கொண்டது.

அப்போது ஐந்து துணை முதல்வர்கள் உட்பட 25 அமைச் சர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத் தார். முன்னதாக நேற்று காலை அமராவதியில் உள்ள ஆந்திர மாநில தலைமைச் செயலகம் சென்ற ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதற்கிடையே சித்தூர் மாவட்டம், நகரி தொகுதியில் இருந்து இரண் டாவது முறையாக வெற்றி பெற்ற, நடிகையும் ஒய்எஸ்ஆர் கட்சியின் மகளிரணித் தலைவியுமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவியது.

எனினும் நேற்று அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந் நிலையில் அவருக்குப் பேரவைத் தலைவி பதவி வழங்க வாய்ப்புள்ள தாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!