கைது செய்யப்பட்ட செய்தியாளரை விடுவிக்க இந்திய நீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கிளப்பும் காணொளிவைப் பதி விட்டதாக செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா கைது செய்யப்பட்ட தற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாகப் பிணையில் விடு விக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தைத் திருமணம் செய்துகொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார். இந்த காணொளிக் காட்சிகளை பிரசாந்த் கனோஜியா  தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

பிரசாந்த் கனோஜியாவின் கைதுக்கு எதிராக அவரது மனைவி உச்ச நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தார். 

விசாரணையின்போது, பிரசாந்த் கனோஜியாவை விடு வித்தால், அவர் செய்த செயல் நியாயம் என்றாகிவிடும் என உ.பி. அரசுத் தரப்பில் முன்னிலை யான வழக்கறிஞர் ஆட்சேபம் தெரி வித்தார். ஆனால், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ஊழல் முதல் சாலைகளில் பதாகைகள் வைப்பதுவரை பலவற்றையும் எதிர்த்து தனி மனிதராகப் போராடி வருகிறார். புத்தி சொல்ல போன தன்னை ஒருவர் மோதித்தள்ள முயன்றதை எதிர்த்து அவர் சாலையில் படுத்து போராடினார். படம்: தமிழக ஊடகம்

20 Sep 2019

புத்தி சொல்லப்போன டிராஃபிக் ராமசாமிக்கு ஏற்பட்ட கதி