திருப்பதியில் பலத்த பாதுகாப்பு

  1. திருமலை: தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கோவிலுக்குத் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் ஏற்கனவே பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தலையொட்டி தற்போது சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பதி அலிபிரி சோதனை சாவடியில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். திருப்பதி பேருந்து நிலையம், ரயில் நிலையம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 24 மணி நேரமும் போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.