காணொளி: உத்தரப் பிரதேசத்தில் இளையரை அடித்த போலிஸ் அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நாகர் மாவட்டத்தில் இளையர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதன் தொடர்பில் போலிசார் இருவர் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இளையருடன் இருந்த சிறுவன், அந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருப்பது வழிப்போக்கர் எடுத்த காணொளி ஒன்றில் தென்படுகிறது. அந்தக் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 

பாதிக்கப்பட்ட இளையரை போலிசார் ஏன் தாக்கினர் என்பது இதுவரை தெளிவாக அறியப்படவில்லை. சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளையரின் அடையாளத்தைச் சோதனையிட  போலிசார் அவரை நிறுத்தியபோது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டதாகக் கூறப்படுகிறது.

போலிசாரில் ஒருவர் அந்த இளையரைத் தரைமீது அழுத்தி அவர் மீது அமர்ந்துகொண்டதை அந்தக் காணொளி காட்டுகிறது. தமது மோட்டார் சைக்கிளின் திறவுகோலைப் பறிமுதல் செய்ய அந்த இளையர் போலிசாரை அனுமதிக்கவில்லை. “நான் என்ன தவறு செய்தேன்” என்று அந்த இளையர் போலிசாரிடம் பலமுறை கேட்டது காணொளியில் பதிவானது.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

சின்மயானந்துக்கு எதிராக ஆதாரம் வேண்டும் என்பதால் அவரது மூக்குக் கண்ணாடியிலேயே கேமரா பொருத்தி, அவரது நடவடிக்கைகளைக் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார். கைதான சின்மயானந்தை 14 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

21 Sep 2019

பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சருமான பாஜக மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்த்

நடிகர் விஜய். படம்: ஊடகம்

21 Sep 2019

நடிகர் விஜயின் பேச்சுக்கு வரவேற்பு