காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் தன்வீர் சைத்தின் கழுத்தில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளார்.. திருமண விழாவின்போது நேற்றிரவு அந்த மர்ம நபரால் குத்தப்பட்ட அவர், உடனே தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.
திரு சைத் கடுமையாகக் காயமடைந்துள்ளபோதும் அவர் தற்போது தேறி வருவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
தப்பியோட முயன்ற அந்த மர்ம நபரைச் சுற்றியுள்ளவர்கள் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அவரது பெயர் பர்ஹான் பாஷா என்றும் அந்த 24 வயது ஆடவர் மைசூரைச் சேர்ந்தவர் என்றும் அவ்வூர் போலிசார் விசாரித்ததன் மூலம் தெரியவந்துள்ளன.