பாலியல் குற்றங்களுக்கு மின்னல்வேக தீர்வு

பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களைச் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் சட்டம் ஒன்றைக் கொண்டு வர இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஆந்திர சட்டசபை கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் ஒன்று கொண்டு வரப்படும் எனறு உறுதி பூண்டார்.

“பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஒரே வாரத்தில் முடிக்கப்பட வேண்டும்,” என அவர் கூறினார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாலியல் பலாத்கார குற்றவாளிகள் நால்வர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை திரு ரெட்டி வரவேற்றுள்ளார்.

ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதாக போலிசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.

இது குறித்து கருத்துரைத்த திரு ரெட்டி, “இரு பெண் குழந்தைகளுக்குத் தந்தையான எனக்கு இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை என்கவுண்ட்டரில் சுட்டதில் என்ன தவறு இருக்கிறது? என்கவுண்ட்டர் செய்த தெலுங்கானா போலிசாருக்கும் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கும் எனது பாராட்டுகள்,” எனக் கூறினார்.

இந்த நிலையில், பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வழக்குகளை விரைந்து விசாரிப்பதற்காக உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் 218 விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பிராஜேஷ் பாதக், “பெண்களுக்கு எதிராக புரியப்படும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கவலை தெரிவித்தார். இதையடுத்து குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை 144 நீதிமன்றங்கள் விசாரணை செய்யும். பாலியல் குற்றங்களுக்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்ட வழக்குகளை 74 நீதிமன்றங்கள் விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த விரைவு நீதிமன்றங்களுக்காக கூடுதல் அமர்வு நீதிபதிகள் பணியிடங்கள் உருவாக்கப்படும். நீதிமன்ற உதவியாளர்களுக்கான பணியிடங்களும் உருவாக்கப்படும். இந்த நீதிமன்றங்களை அமைப்பதற்கான 60 விழுக்காடு நிதி மத்திய அரசிடமிருந்து பெறப்படும். எஞ்சிய 40 விழுக்காடு நிதி, மாநில அரசு நிதியிலிருந்து செலவிடப்படும்.

“ஒரு விரைவு நீதிமன்றத்துக்கான செலவு ரூ.63 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது,” என்று திரு பிராஜேஷ் பாதக் தெரிவித்தார்.

இதற்கிடையே, உத்தரப் பிரதேசத்தில் இரவு நேரத்தில் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்காக போலிஸ் வாகனத்தில் அவர்களை அழைத்துச் செல்லும் இலவச சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்களுக்கான இந்தப் பாதுகாப்பு வசதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் வீட்டிற்கோ அல்லது வேறோர் இடத்திற்குத் தனியாகச் செல்லவேண்டிய பெண்கள், 112 எனும் எண்ணில் அழைத்து போலிசாரின் உதவியை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களை அவர்கள் செல்லவேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லும் போலிஸ் குழுவில் இரு பெண் அதிகாரிகளும் இடம்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சேவையை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில போலிஸ் தலைமை இயக்குநர் ஓ.பி.சிங் கூறினார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!