மும்பை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் பிருந்தா காரத் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறு கையில், “பொதுமக்களின் நெஞ்சைப் பிளப்பதற்காக சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகிய மூன்றையும் மோடி அரசு ‘திரி சூலமாக’ பயன்படுத்துகிறது.
அரசியல் சாசனத்தை அரசு அலட்சியம் செய்கிறது. “நாட்டில் பெண்களின் அவல நிலை பற்றி மத்திய அரசுக்குத் தெரியவில்லை.இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 93 பெண்கள் பாலியல் பலாத்கார வன்கொடுமைக்கு ஆளாக்கப் படுகின்றனா். அவா்களில் மூன் றில் ஒரு பெண் 18 வயதுக்கும் குறைவானவா். ஆனால், 4 விழுக்காடு பாலியல் வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனா்.
பிரதமா் மோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் பொய்களின் உற்பத்திக் கூடங்களாக திகழ்கின்றனர்,” என்று கடுமையாகச் சாடினார் பிருந்தா காரத்.