மும்பை: அமைச்சர் பதவி கிடைக்காததால் மகாராஷ்டிராவில் சிவசேனாவிலும், அதன் கூட்டணிக் கட்சிகளிலும் கணிசமானோர் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காததால், மூன்று கட்சிகளிலும் பலர் அதிருப்தி அடைந்துள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
நடப்பு அரசு அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த, சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தின் சகோதரர் சுனில் ராவத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
இதையடுத்து அமைச்சரவை பதவியேற்பு விழாவில் சஞ்சய் ராவத் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி அமைத்துள்ள மூன்று கட்சிகளிலும் மிகவும் திறமையானவர்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“நானோ, என்னுடைய குடும்பமோ, எப்போதும் பதவியை விரும்பியதில்லை. கட்சியின் நலனே முக்கியம். உத்தவ் தாக்கரே முதல்வரானதே எனக்குப் போதும்,” என்றார் சஞ்சய் ராவத்.
எனினும் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளவர்களின் பட்டியல் பெரிதாக உள்ளது.
முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான், மூத்த தலைவர்கள் நசீம் கான், பிரனதி ஷிண்டோ, சங்க்ராம் தோப்டே, அமின் படேல் உள்ளிட்டோர் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்க