கோல்கத்தா: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கைவிட வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை மாநில முதல்வரே நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று அவர் கூறியுள்ளார்.
“அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க வேண்டியது தொடர்பில் எனது கடமைகளை நான் செய்து வருகிறேன்,” என்று ஆளுநர் ஜகதீப் தன்கர் குறிப்பிட்டுள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.