திருவனந்தபுரம்: பிரபல நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் ஏதுமில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் காலமானார் கலாபவன் மணி. அவரை நண்பர்கள் சிலர் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக மணியின் சகோதரர் தொடுத்த வழக்கையடுத்து சிபிஐ விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கலாபவன் மணி தினமும் அளவுக்கதிகமாக மது அருந்தியதாகவும், அதனால் உடல்நலம்
பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.