பேட்டரி தொழிற்சாலையில் தீவிபத்து; 14 பேர் காயம்

புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்து, இடிந்து விழுந்த தில் 14 பேர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீயை அணைக்க முற்பட்ட 13 தீயணைப்பு அதிகாரிகளும் ஒரு பாதுகாப்பு காவலரும் காயமடைந்த ததாகப் போலிசார் தெரிவித்தனர்.

மேற்கு புதுடெல்லியில் உள்ள பீரா கார்ஹி பகுதியில் இருந்த பேட்டரி தொழிற்சாலை கட்டட இடிபாடுகளில் இருந்து மூவர் மீட்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

35 தீயணைப்பு இயந்திரங்கள் மூலம் கொளுந்துவிட்டு எரியும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தீயணைப்பு வீரர்கள் உட்பட ஏராள மானோர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

டெல்லி தொலைக்காட்சி செய்தி ஒளிவழியில் சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கூறுகையில், அதி காலை 5 மணியளவில் ஒரு பயங்கர வெடிப்புச் சத்தத்தை தான் கேட்ட தாகவும் சம்பவ இடத்துக்கு பதற் றத்துடன் ஓடியதாகவும் கூறினார்.

தீயணைப்புப் பணிகள் நடை பெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கட்டடத்துக்குள் மிகப் பயங்கர வெடிப்புச் சத்தம் கேட்டது. இதையடுத்து, கட்டடமே நிலை குழைந்து இடிந்துவிழுந்து தரை மட்டமானதாக தீயணைப்பு நிலையத் தகவல்களும் தெரிவித்துள்ளன.

அதிகாலை 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டபோது கட்ட டத்திற்குள் தொழிலாளர்கள் யாரும் இல்லை என்றும் மீட்புப் பணியின் போது தீயணைப்பு அதிகாரிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் போலி சார் தெரிவித்தனர். தீமூண்டதைத் தொடர்ந்து கடும் புகைமூட்டம் கட்டடத்தின் பின்புற பகுதியைச் சூழ்ந்தது. இப்பகுதியில் பேட்டரிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அமிலமும் பிளாஸ்டிக் போன்ற எரியக்கூடிய பொருட்களும் இருந்த தாகப் போலிசார் கூறினர்.

மோசமான பாதுகாப்பு நடவடிக் கைகளே இந்தியாவில் அடிக்கடி ஏற்படும் தீவிபத்துகளுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. கடந்த மாதம் மின்கசிவு காரணமாக டெல்லியில் ஒரு கட்டடத்தில் தீ மூண்டதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!