சுடச் சுடச் செய்திகள்

ஒரு மில்லியன் ரூபாய் மதிப்பிலான தங்க, பிளாட்டினம் பேனா

திருப்பதியில் இருக்கும் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு பக்தர்கள் விதவிதமாக காணிக்கை செலுத்துவது தெரிந்த விஷயம்தான்.

ஆனால், வித்தியாசமாக ஒரு பேனாவை காணிக்கையாக்க இருக்கிறார் பக்தர் ஒருவர்.

அது சாதாரண பேனா அல்ல. தங்கம், பிளாட்டினம் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட அந்தப் பேனாவின் விலை ஒரு மில்லியன் ரூபாய் என்று கூறப்படுகிறது.

சுவிட்சர்லாந்தில் செய்யப்பட்ட அந்தப் பேனாவின் மேல் மூடி பகுதியில் சீனிவாசப் பெருமாளின் உருவமும் கீழ்ப் பகுதியில் பத்மாவதி தாயாரின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. 

பெயர் வெளியிட விரும்பாத பக்தர் ஒருவர் அதனை விரைவில் திருப்பதி உண்டியலில் செலுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

#தமிழ்முரசு #திருப்பதி #காணிக்கை #பேனா #சுவிட்சர்லாந்து

 

 

 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon