மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர்: ஆங்கிலேயர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இணைந்து செயல்பட்டது

ஆர்எஸ்எஸ் அமைப்புதான் வெள்ளையர்களுடன் கைகோர்த்து செயல்பட்டதாக மும்பை: கடந்த காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புதான் வெள்ளையர்களுடன் கைகோர்த்து செயல்பட்டதாக மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கூறி உள்ளார்.

மகாத்மா காந்தி குறித்து பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே தெரிவித்துள்ள கருத்து கண்டனத்துக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அனந்த்குமார் ஹெக்டே, மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம் என விமர்சித்தார்.

மேலும், ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பான நிலைப்பாட்டை பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என மராட்டிய வருவாய்த் துறை அமைச்சருமான பாலாசாகேப் தோரட் வலியுறுத்தி உள்ளார்.

“அனந்த்குமார் ஹெக்டே கருத்து மிகவும் கண்டனத்திற்குரியது. இது பாஜக தலைமையின் அறிவு மழுங்கிப் போய்விட்டதைக் காட்டுகிறது.

“அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தான் ஆங்கிலேயர்களுடன் கைகோர்த்துக்கொண்டு சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்பட்டது. இந்நிலையில், பாஜகவின் உண்மை முகம் தற்போது அம்பலமாகி உள்ளது,” என்று பாலாசாகேப் தோரட் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக காங்கிரஸ், பாஜக தலைவர்கள் மத்தியில் வார்த்தைப் போரும், அறிக்கை மோதலும் நீடித்து வருகிறது.

இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கி வருகின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களில் அக்கட்சிகளின் ஆதரவாளர்களும் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!