புதுடெல்லி: மீண்டும் அச்சம், போலிஸ் குவிப்பு, உத்தரவு

புதுடெல்லி: பயங்கரமான கலவரங்களும் வன்செயல்களும் நடந்து முடிந்திருக்கும் புதுடெல்லியில் மீண்டும் பதற்றம் கூடி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வன்செயல் பற்றிய புரளிகளே இதற்குக் காரணம் என்றும் அத்தகைய செய்திகளைக் கேட்டு பயப்பட வேண்டாம் என்றும் போலிசார் அறிவித்து வருகிறார்கள்.

என்றாலும் திடீர் திடீரென்று மேற்கு டெல்லியில் கலவரம் நடப்பதாக போலிசாருக்குத் தொலைபேசி மூலம் தகவல் வருவதாகக் கூறப்பட்டதை அடுத்து அந்த நகரின் பல்வேறு இடங்களிலும் போலிசார் குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மேற்கு டெல்லியில் மட்டும் 5 மணி நேரத்தில் 481 பேர் போலிசாருடன் தொடர்புகொண்டு தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தியதாகவும் ஆனால் அவை எல்லாமே போலி என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததாகவும் புதுடெல்லி போலிசார் தெரிவித்தனர்.

வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களை அணுக்கமாகப் போலிஸ் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

புரளி கிளப்பிய சிலர் கைதாகி இருப்பதாகவும் கூறப்பட்டது. யாரும் அச்சமடையத் தேவையில்லை என்று அதிகாரிகள் பல இடங்களிலும் பொதுமக்களுக்கு அறிவிப்பு விடுத்து வருகிறார்கள்.

புதிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கும் ஆதரிப்பவர்களுக்கும் இடையே அண்மையில் புதுடெல்லியில் நடந்த நான்கு நாள் கலவரங்களில் 47 பேர் மாண்டுவிட்டனர். 903 பேர் கைதாகி இருக்கிறார்கள். 254 புகார் அறிக்கைகளைப் போலிஸ் பதிந்துள்ளது.நகரின் பல்வேறு இடங்களிலும் துப்புரவு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில், ஷாகின் பாக் என்ற பகுதியில் இந்து அமைப்புகள் புதிய போராட்டத்தை அறிவித்து உள்ளதால் அங்கு 144 தடை உத்தரவைப் பிறப்பித்து உள்ள அதிகாரிகள், ஏராளமான போலிசாரையும் பணியில் அமர்த்தி இருக்கிறார்கள்.

இதனிடையே, டெல்லி போலிசார் உள்துறை அமைச்சிடம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இவ்வேளையில், வடகிழக்கு டெல்லியில் புதிதாக நான்கு சடலங்கள் வடிகால்களில் காணப் பட்டதை அடுத்து அங்கு பதற்றம் கூடியதாகவும் அதிக போலிசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!