டெல்லியில் மீண்டும் கலவரம் வெடிக்கக்கூடும்: உளவுத்துறை எச்சரிக்கை

புதுடெல்லி: வன்முறைச் சம்பவங்கள் ஓய்ந்துள்ள நிலையில், அங்கு சமூக விரோதிகள் மீண்டும் கலவரத்தை தூண்டிவிட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதையடுத்து வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்கும் பணியையும் போலிசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

பதற்றம் நிறைந்த பகுதிகள் அடையாளம் காணப்பட்டு போலிசார் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ள நிலையில், , 7,600 துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் மற்றும் வன்முறை தொடர்பாக 120 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே டெல்லி கலவரத்தின் போது 79 வீடுகள், 327 கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

வன்முறைக்கு பலியானவர்களில் இதுவரை 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!