தொடர்ந்து முடக்கம் ஏற்பட்டால் பொருளியல் படுவீழ்ச்சி காணும்

கொரோனா கிருமி பிரச்­சி­னை­யால் வேலை­யி­ழந்து வறு­மை­யில் இருக்­கும் ஏழை­க­ளுக்கு உண­வ­ளிக்க உட­ன­டி­யாக ரூ.65,000 கோடி தேவை. முடக்கநிலையைத் தொடர்ந்து நீட்­டிக்­கா­மல் பொரு­ளி­ய­லைப் படிப்­ப­டி­யா­கச் செயல்­பாட்­டுக்­குக் கொண்டு­ வ­ரு­வ­தற்­கான வழி­யைத் தேட வேண்­டும் என இந்திய பொருளியல் வல்லுநரும் ரிசர்வ் வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நராகப் பதவி வகித்தவருமான ரகு­ராம் ராஜன் (படம்), ராகுல் காந்­தி­யு­ட­னான காணொளி உரை­யா­ட­லில் தெரி­வித்­தார்

நோய்த்தொற்றால் இந்­தி­யா­வில் ஏற்­பட்­டுள்ள பொரு­ளி­யல் பாதிப்பு, தீர்­வு­கள் குறித்­துக் காங்­கி­ரஸ் எம்.பி. ராகுல் காந்தி பல்­வேறு நிபு­ணர்­க­ளு­டன் பேச­வி­ருக்­கி­றார், இதில் முதற்­கட்­ட­மாக அனைத்துலகப் பணநிதியத்தின் தலைமைப் பொருளியல் ஆலோசகராகவும் அந்த அமைப்பின் ஆய்வுத்துறை இயக்குநராக பணியாற்றியவருமான ரகு­ராம் ராஜ­ன் 20 நிமி­டங்­க­ளுக்­கும் மேலாக ராகுல் காந்தியிடம் காணொளி வாயி­லா­கப் பேசி­னார். அப்­போது ரகு­ராம் ராஜன் பகிர்ந்து கொண்­ட­தா­வது:

கொரோனா கிரு­மித் தொற்று நெருக்­க­டி­யால் பாதிக்­கப்­பட்டு வேலை­வாய்ப்பை இழந்து, வரு­மா­ன­மின்றி அல்­லல்­படும் ஏழை­க­ளுக்கு உண­வ­ளிக்க உட­ன­டி­யாக ரூ.65,000 கோடி தேவை. இந்­தி­யா­வின் உள்­நாட்­டு­ மொத்த உற்­பத்­தி­யின் மதிப்பு ரூ.200 லட்­சம் கோடி. இதில் ரூ.65,000 கோடி­தான் ஏழை­க­ளுக்கு ஒதுக்­கப்­போ­கி­றோம். இது பெரிய தொகை அல்ல.

தேசிய அள­வில் நடை­மு­றை­யில் உள்ள முடக்­கத்தை நிறை­வு­செய்ய மத்­திய அரசு முடி­வெ­டுத்­த­வு­டன் முத­லில் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை, உயி­ரைக் காக்க முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும்.

கொரோனா பாதிப்பு என்­பது இது­வரை எந்த நாடும் சந்­திக்­காத இக்­கட்­டான சூழ்­நிலை.

இந்தச் சூழ்­நி­லை­யில் நாம் மக்­க­ளையும் பொரு­ளி­ய­லையும் காப்பதற்கு மர­பு­களை, விதி­மு­றை­களை மீற­லாம். அதே­நே­ரத்­தில் நம்மிடம் உள்ள வளங்­கள், திறன்கள் பற்றியும் நாம் கருத்­தில் கொள்ள வேண்­டும். எனவே, எதற்கு முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­போ­கி­றோம் என்­பதற்கான திட்டத்தை வகுத்து அதற்கு முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும். எவ்­வாறு பொரு­ளா­தா­ரத்தை நாம் ஒன்­றி­ணைந்து பாடு­பட்டு பாது­காக்­கப்­போ­கி­றோம் என்­பதை நாம்­தான் முடிவுசெய்ய வேண்­டும்.

என்­னைப் பொறுத்­த­வரை மூன்­றா­வது அல்­லது நான்­கா­வது முறை நாடு முடக்­கப்­பட்­டால் இந்­தி­யப் பொரு­ளி­யல் பேர­ழி­வைச் சந்­திக்க நேரி­டும். மேற்­கத்­தி­ய­ நா­டு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது நிதி மற்­றும் பண­மதிப்பு நமக்கு அள­வா­ன­து­தான்.

ஆத­லால், சிறந்த வழி­யில் பொரு­ளி­யலை நாம் எவ்­வாறு மக்­க­ளுக்­குத் திறந்து விடப்­போ­கி­றோம் என்­பது குறித்து முடி­வெ­டுக்க வேண்­டும். அமெ­ரிக்கா அள­வுக்கு வலி­மை­யாக இருந்­தால், நம்­பிக்­கை­யி­ருந்­தால் நாள்­தோ­றும் 20 லட்­சம் பேருக்­குப் பரி­சோ­தனை நடத்த வேண்­டும். ஆனால் நாள்­தோ­றும் 25,000 முதல் 30,000 பேர்­களை மட்­டுமே சோதிக்க முடி­கிறது.

ஆத­லால் 100 விழுக்­காடு கொரோனா தொற்றை ஒழித்து விட்டு, வென்­று­விட்­டு­தான் பொரு­ளி­ய­லைத் திறந்­து­வி­டு­வோம் என்ற இலக்­கெல்­லாம் நம்­மி­டம் இல்லை. ஆனால் நாளொன்­றுக்கு 5 லட்­சம் சோத­னை­க­ளா­வது அவ­சி­யம்.

நாம் பொரு­ளி­ய­லைத் திறந்­து­வி­டும்­போது ஆங்­காங்கே கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் இருக்­கவே செய்­வார்­கள், அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்தி, சிகிச்­சை­ய­ளித்­துப் பொரு­ளி­யலை முடக்­கா­மல் பார்த்­துக்கொள்ள வேண்­டும். அர­சாங்­கத்­தின் வேலை­வாய்ப்­பு­களை மட்­டும் மக்­கள் நம்­பி­யிராமல் சிறந்த வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வது அவ­சி­யம். இந்­தியாவின் உற்­பத்­திக்­கும் விநி­யோ­கத்­திற்­கும் அனைத்­து­லக அள­வில் நல்ல சந்தை இருக்­கிறது என்­பது தெரி­ய­வந்­துள்­ளது. ஆத­லால், நிச்­ச­யம் உல­க­ள­வில் வர­வேற்­பை­யும் ஆத­ர­வை­யும் இந்­தி­யா­வால் பெறமுடி­யும் என்று ரகு­ராம் ராஜன் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!