வெளி மாநிலத் தொழிலாளிகளுடன் முதல் சிறப்பு ரயில் புறப்பட்டது

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று காரண­மாக சுமார் 10 மில்­லி­யன் வெளி மாநிலத் தொழி­லா­ளர்­கள் பல மாநி­லங்­க­ளி­லும் பல நாட் களாகத் தேங்­கிக் கிடக்­கிறார்­கள்.

அவர்­கள் தங்­கள் சொந்த ஊர்­களுக்­குச் செல்ல அனு­ம­திக்­கும்­படி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரு­கி­றார்­கள்.

அத்­த­கைய ஊழி­யர்­களை ஏற்றிச் செல்ல பேருந்து, ரயில்­களை அனு­ம­திக்­கும்­படி மத்­திய அரசை பல மாநி­லங்­கள் கேட்­டுக்­கொண்­டுள்­ளன. ஆனால் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக இது­நாள்­வரை மத்திய அரசு மாநில அர­சு­க­ளுக்­குச் செவி சாய்க்­க­வில்லை,

இந்த நிலை­யில், நேற்று முதன்­மு­த­லாக தெலுங்­கானாவில் இருந்து ஜார்க்­கண்ட் தொழி­லா­ளர்­கள் 1,200 பேர், 24 பெட்­டி­க­ளைக் கொண்ட ரயிலில் சொந்த ஊர் சென்­ற­னர்.

அதே­வே­ளை­யில், ராஜஸ்­தா­னில் இருந்து வியா­ழக்­கி­ழமை ஒரே நாளில் 40,000 வெளி மாநிலத் தொழி­லா­ளர்­கள் பேருந்­து­கள் மூலம் தங்­கள் சொந்த ஊர்­க­ளுக்குப் புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

இப்­படி பல மாநி­லங்­களும் வெளி மாநி­லத்­த­வர்­களை அவரவர் ஊர்­க­ளுக்கு அனுப்­பத் தொடங்கி இருப்­ப­தாக ஊடகத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!