இந்தியா: 40 ஆயிரம் பேர் பாதிப்பு; 1,301 பேர் மரணம்

புது­டெல்லி: கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை இந்­தி­யா­வில் 40 ஆயி­ரத்தை கடந்­துள்­ளது. பலி­யா­னோர் எண்­ணிக்கை 1,301 ஆக அதி­க­ரித்­துள்­ளது என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கிரு­மித் தொற்றுப் பர­வ­லைத் தடுக்க மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் நிலை­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

இதே­வே­ளை­யில் கொவிட் 19 நோயி­லி­ருந்து சிகிச்­சைக்­குப் பின் 10,633 பேர் முழு­மை­யா­கக் குண­ம­டைந்­துள்­ள­னர்.

தற்­போது நாடு முழு­வ­தும் ஊர­டங்கு உத்­த­ரவு மே 17ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூ­லம் இந்­தி­யா­வில் தொடர்ந்து 56 நாட்­கள் ஊர­டங்கு உத்­த­ரவு அம­லில் இருக்­கும்.

நாட்­டி­லேயே மகா­ராஷ்­டி­ரா­வில்­தான் அதி­க­மா­னோர் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அங்கு சுமார் 12 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு கிரு­மித்­தொற்று உள்­ளது.

குஜ­ராத்­தில் சுமார் 5 ஆயி­ரம் பேரும் டெல்­லி­யில் 4 ஆயி­ரம் பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தமி­ழ­கத்­தில் 2700க்கும் மேற்­பட்­ட­வர்­கள் கொவிட் 19 நோயால் அவ­திப்­ப­டு­கின்­ற­னர்.

மும்பை தாராவி குடி­சைப் பகு­தி­யில் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 5 ஆயி­ரத்தை நெருங்­கு­கிறது. அங்கு நேற்று முன்­தி­னம் ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

இது­வரை ஆசி­யா­வின் மிகப்­பெ­ரிய குடி­சைப் பகு­தி­யான தாரா­வி­யில் 18 பேரை கொரோனா கிரு­மித் தொற்று பலி வாங்­கி­யுள்­ளது. இதற்­கி­டையே டெல்­லி­யில் மத்­திய ரிசர்வ் போலிஸ் படை­யைச் சேர்ந்த 135 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும் பல­ருக்கு பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அதன் முடி­வு­கள் இன்­னும் வெளி­யா­க­வில்லை.

நோய்த்­தொற்­றியுள்ள வீரர்­கள் அனை­வ­ரும் டெல்லி அர­சாங்­கத்­தின் தனி­மைப்­ப­டுத்­தும் முகா­மில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இதை­ய­டுத்து விடு­முறை முடிந்து பணிக்­குத் திரும்­பும் வீரர்­க­ளுக்­கும் மருத்­து­வப் பரி­சோ­தனை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் நோய்த்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டால் அவ்­வீ­ரர்­கள் 14 நாட்­க­ளுக்கு தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்­றும் மத்­திய ரிசர்வ் போலிஸ் படை தெரி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!