தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ மேஜர் உட்பட ஐவர் மரணம்

ஸ்ரீநகர்: தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ கர்னல், மேஜர் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்தனர். 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஒட்டு மொத்த உலகமும் கொரோனா கிருமித் தொற்றின் தாக்கத்தால் முடங்கியுள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கர்னல் சர்மா தலைமையில் வீரர்கள் சந்தேகத்துக்குரிய பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சாஞ்சி முல்லா என்ற கிராமத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கு சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பின்றி பாதுகாப்புப் படையினர் கவனத்துடன் செயல்பட வேண்டி இருந்தது.

நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் மீது ராணுவத்தினர் திட்டமிட்டு அதிரடித் தாக்குதல் நடத்தியதில் பிணைக்கைதிகளாக சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். நள்ளிரவு வரை நீடித்த துப்பாக்கிச் சண்டையின்போது ராணுவ கர்னல் அசுடோஷ் சர்மா, மேஜர் அனுஜ், ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் துணை ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் வீரமரணம் அடைந்தனர்.

தீவிரவாதிகளில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவச் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இதையடுத்து எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

இதற்கிடையே இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பும் தி ரெசிஸ்டென்ஸ் ஃபிரன்ட்(டிஆர்எப்) அமைப்பும் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளன. இதனால் குழப்பம் நிலவுகிறது.

தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நடந்துகொண்டிருந்த போதே, அதற்குப் பொறுப்பேற்பதாக ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு அறிவித்தது.

ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் இது தங்களுடைய அமைப்பு நடத்திய தாக்குதல் என்று டிஆர்எப் அறிவித்தது. மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளின் புகைப்படங்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது அந்த அமைப்பு.

இதற்கிடையே வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் ஐந்து பேருக்கும் அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐந்து வீரர்களும் தேசத்துக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாக அவர் டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“ஐந்து வீரர்களும் நாட்டு மக்களைப் பாதுகாக்க ஓய்வின்றி உழைத்தனர்,” என்று பிரதமர் மோடி மேலும் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!