செய்திக்கொத்து 04-05-2020 (இந்தியா)

உதவிக்கரம் நீட்டிய அரபு அமீரகம்

புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் 7 டன் மருத்துவப் பொருட்களை வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இது தொடர்பாக டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே பல்லாண்டு காலமாக நீடித்து வரும் ஆழமான சகோதரத்துவ உறவை அங்கீகரிக்கும் வகையில் இந்நடவடிக்கை அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். “ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை 34 நாடுகளுக்கு 348 டன்களுக்கும் அதிகமான மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது. இது 3 லட்சத்து 48 ஆயிரம் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவியாக அமையும்.

“கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த முற்படும் நாடுகளுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் கடமைப்பட்டுள்ளது,” என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கதாநாயகர்கள் என்று குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்

பெங்களூரு: தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை கதாநாயகர்கள் என்று குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்ட ஐஏஎஸ் அதிகாரிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு கர்நாடக அரசு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. கர்நாடகாவில் பணியாற்றும் முஹமது மோசின் என்ற அந்த அதிகாரி தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் 300க்கும் மேற்பட்ட தப்லிக் கதாநாயகர்கள் நாட்டுக்குச் சேவை செய்யும் வகையில் பிளாஸ்மா நன்கொடை வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தக் கதாநாயகர்களின் மனிதாபிமானப் பணிகளை ஊடகங்கள் மக்களுக்குத் தெரிவிப்பதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்தப் பதிவு குறித்து 5 தினங்களுக்குள் விளக்கம் அளிக்கவேண்டும் என கர்நாடக அரசு அவருக்கு உத்தரவிட்டுள்ளது.


கர்நாடகாவில் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி: அரசு அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று முதல் மதுக்கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா கிருமித் தொற்று பாதிப்புள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் மதுக்கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். “மதுப்பிரியர்கள் மது வாங்கக் கடைக்கு வரும்போது 3 அடி சமூக இடைவெளி விட்டு, முகக்கவசம் அணிந்து மது வாங்கிச் செல்ல வேண்டும். மதுக்கடைகள் திறக்கப்பட்டாலும் மதுக்கூடங்களைத் திறக்க அனுமதி இல்லை,” என்று கர்நாடக அமைச்சர் நாகேஷ் தெரிவித்துள்ளார்.


சிமெண்ட் கலவை வாகனத்தில் மறைந்து சென்ற 18 பேர் கைது

இந்தூர்: ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மாநிலங்கள் இடையேயான போக்குவரத்து முடங்கி உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கு சிமெண்ட் கலவை வாகனத்தில் மறைந்து கொண்டு செல்ல முயன்ற 18 பேர் இந்தூரில் கைதாகினர். நேற்று முன்தினம் இந்தூர் நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலிசார் அவ்வழியே வந்த சிமெண்ட் கலவை வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது கலவை இயந்திரத்துக்குள் 18 பேர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கையில் பணமின்றி தவித்ததால் சொந்த ஊருக்குச் செல்ல முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வாகன ஓட்டுநர் உட்பட அனைவரும் கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!