ஊரடங்கு தளர்வு; வாகன நெரிசலில் டெல்லி

புதுடெல்லி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இச்சமயத்தில், குறிப்பிட்ட சில நடவடிக்கை களுக்கு மட்டும் அனுமதி தளர்த்தப்பட்டுள்ளதை அடுத்து இந்தியத் தலைநகர் புதுடெல்லி யின் சாலைகள் நேற்று மீண்டும் தனது பழைய நிலைமைக்கே திரும்பின. இதனால் டெல்லியின் முக்கிய சாலைகளில் நேற்று கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சுமார் ஒரு மாத காலத்துக்குப் பின் ஊரடங்கில் தளர்வுகள் அறி விக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் நேற்று பணி நிமித்தம் வெளியில் கிளம்பினர். நான்கு சக்கர வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்து செல்லும் நிலையே தென்பட்டது.

இதுகுறித்து டெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவால் காெணாளி வழி செய்தியாளா்களிடம் கூறுகை யில், “டெல்லியில் அரசு, தனியாா் அலுவலகங்கள் நேற்று முதல் செயல்படத் தொடங்கி உள்ளன. விமானம், மெட்ரோ ரயில், பேருந்து போக்குவரத்துக்கான தடைகள் தொடர்கிறது. பேரங்காடிகள், திரை யரங்குகள், முடி திருத்தகங்கள் தொடா்ந்து மூடி இருக்கும். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் இறுதிச் சடங்குகளில் 20 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்,” என்று தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!