பயங்கரவாதிகள் தாக்குதல்; தமிழர் உட்பட நால்வர் மரணம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.சந்திரசேகர், 31, உட்பட மூன்று சிஆர்பிஎஃப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் ஒருவனும் மாண்டுபோனான்.

தென்காசி மாவட்டம், மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த திரு சந்திரசேகருக்கு மனைவியும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர். அவரது நல்லுடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த சனிக்கிழமை இரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கர்னல், மேஜர் உட்பட ஐவர் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், “பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து, காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யும் நோக்கத்துடன் செயல்படுகிறது. அந்நாடு தூண்டிவிடும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்,” என்று இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவனே உறுதியாகத் தெரிவித்தார்.

இதனிடையே, “உலகமே கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடி வரும் வேளையில், ஒரு சில நாடுகள் பயங்கரவாதம், பொய்ச் செய்திகள், திரித்து உருவாக்கப்பட்ட காணொளிகள் போன்ற ‘வைரஸ்’கள் மூலம் சமூகங்களையும் நாடுகளையும் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன,” என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக பாகிஸ்தானைச் சாடியுள்ளார். நேற்று முன்தினம் நடந்த அணி சேரா இயக்க உச்சநிலை மாநாட்டில் அவர் இவ்வாறு பேசினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!