கர்நாடகா: வெளிமாநில தொழிலாளர் ரயில்கள் ரத்து

பெங்களூரூ: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவைக் கட்டுமானத் தொழில் அதிபர்கள் சந்தித்துப் பேசியதை அடுத்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கான சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு குறைந்த ஆரஞ்ச், பச்சை மண்டலங்களில் கட்டுமான தொழிலைத் தொடங்க கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தொழிலாளர்கள் வெளியேறினால் கட்டுமானத் தொழிலுக்கு ஆட்கள் கிடைக்காமல் போய்விடும் என்பதற்காக முதலமைச்சர் எடியூரப்பாவைக் கட்டுமான தொழில் அதிபர்கள் சந்தித்துப் பேசினர்.

இதையடுத்துக் கட்டுமானத் தொழிலாளர்களின் வேலையும் ஊதியமும் உறுதி செய்யப்படும் எனக் கூறியுள்ள எடியூரப்பா, தொழிலாளர்கள் வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, கொவிட்-19 தொடர்பான நிதி நிலைமைகளுக்காக ரூ.1,610 கோடி நிவாரண நிதியையும் எடியூரப்பா அறிவித்தார். இதன் மூலம் முடிதிருத்துவோர் 230,000 பேருக்கும் 775,000 ஓட்டுநர்களுக்கு ஒரே முறை நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் அளிக்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!