செய்திக்கொத்து (இந்தியா) 7-5-2020

மதுபானக் கடையில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஆசிரியர்கள் நியமனம்

ஹைதராபாத்: மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலைச் சரிசெய்ய ஆந்திர அரசு ஆசிரியர்களை அமர்த்தியது தொடர்பாகச் சர்ச்சை எழுந்துள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள மதுபானக் கடைக்குச் சென்றவர்கள் யாரும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளதையடுத்து, அம்மாநில அரசு ஆசிரியர்களை நியமித்துள்ளது. மதுபானம் வாங்க வரிசையில் நின்றவர்களுக்கு ஆசிரியர்கள் டோக்கன்கள் விநியோகித்ததாகவும் கூட்டத்தைச் சீர்செய்ய உதவியதாகவும் அதிகாரிகள் கூறினர்.


நடிகை ரோஜாவுக்கு நோட்டீஸ்

ஹைதராபாத்: நடிகை ரோஜா கடந்த மாதம் 21-ம் தேதி தனது தொகுதியான நகரியில் உள்ள கிராமத்தில் அமைக்கப்பட்ட போர்வெல் மோட்டாரை திறந்து வைக்கச் சென்றார்.

அப்போது கிராம மக்கள், தூய்மை பணியாளர்கள் சாலையின் இருபக்கமும் நின்று அவர் வரும் பாதையில் பூக்களைத் தூவிய காணொளி பரவியது. இதையடுத்து ஊரடங்கு நடப்பில் உள்ளபோது, ஊர் மக்களைக் கூட்டமாக நிற்க வைத்தது குறித்து விளக்கமளிக்க கோரி ரோஜாவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஹிஸ்புல் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவன் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் நடைபெற்ற பாது

காப்புப் படையினருடனான சண்டையில் ஹிஸ்புல் முஜாஹி

தீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவனான ரியாஸ் நைகு சுட்டுக் கொல்லப்பட்டான்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடைய ரியாஸ் நைகு குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 12 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரியாஸ் நைகுவும் அவனது கூட்டாளியும் கொல்லப்பட்டனர்.

ரியாஸ் நைகு கொல்லப்பட்டிருப்பது ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புக்கு பெரும் பின்னடைவாகவும் இந்திய பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாகவும் கூறப்படுகிறது.


500 ரூபாய் நிதியைப் பெற 30 கி.மீ. நடந்து சென்று ஏமாந்த மூதாட்டி

ஆக்ரா: ஊரடங்கு உத்தரவால் வாடும் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ஜன்தன் வங்கிக் கணக்கில் ரூ.500 வரவு வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து டெல்லி ஆக்ரா பகுதியில் வசிக்கும்

50 வயதான ராதா தேவி என்பவர், தனது வங்கிக் கணக்கு உள்ள பைரசோபாத் மாவட்டம் பச்சோகரா என்ற ஊருக்கு ஆக்ராவில் இருந்து 30 கிலோ மீட்டர் நடந்தே சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற பிறகு தான் அவரது வங்கிக் கணக்கு ஜன்தன் கணக்கு அல்ல என்று தெரியவந்ததைத் தொடர்ந்து மீண்டும் நடந்தே ஊர் திரும்பினார்.

ராதா தேவி ஏமாற்றமடைந்தது அறிந்த 29 பேர் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். ரூ.207 மட்டுமே இருந்த அவரது வங்கிக்கணக்கில் தற்போது ரூ.26,000 சேர்ந்துள்ளது.


39 கோடி பேருக்கு நிதியுதவி

புதுடெல்லி: மே 5ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் ஏறத்தாழ 39 கோடி பேருக்கு 34 ஆயிரத்து 800 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுவரை 8 கோடியே 19 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் 16,394 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

20 கோடி பெண்களின் ஜன்தன் வங்கி கணக்குகளில் முதல் கட்டமாக 10,025 கோடி ரூபாயும் இரண்டாவது கட்டமாக

5 கோடியே 57 லட்சம் பெண்களின் கணக்குகளில் 2,785 கோடி ரூபாயும் வரவு வைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள 2,203,492 கோடி ரூபாயை நிவாரணமாகப் பெற்றுள்ளனர். முதியோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 2,281,405 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!