மீண்டும் வாயுக் கசிவு; பீதியில் மக்கள்

விசா­கப்­பட்­டி­னம்: ஆந்­தி­ரா­வில் உள்ள விசா­கப்­பட்­டி­னத்­தில் நேற்­றுக் காலை மீண்­டும் வாயுக் கசிவு ஏற்­பட்­ட­தால் மக்­கள் பீதி­ய­டைந்­த­னர்.

விசா­கப்­பட்­டி­னத்­தி­லி­ருக்­கும் தென் கொரிய நிறு­வ­னத்­தின் ரசா­யன தொழிற்­சா­லை­யி­லி­ருந்து நேற்று முன் தினம் அதி­காலை ‘ஸ்டை­ரீன்’ என்ற விஷ­வாயு கசிந்­தது.

இத­னால் ஆர்.ஆர்.வெங்­க­டா­ பு­ரத்­தில் உள்ள குடி­யி­ருப்புப் பகு­தியை ஒட்டி விஷ­வாயு காற்­றில் கலந்து மூன்று கிலோ மீட்­டர் சுற்றளவுக்கு பர­வி­யது. இத­னால் ஐந்­துக்­கும் மேற்­பட்ட கிரா­மங்­கள் பாதிக்­கப்­பட்­டன.

வீடு­களில் துாங்கிக் கொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு மூச்­சுத் திண­றல், மயக்­கம், கண் எரிச்­சல் ஏற்­பட்­டது. இது­வரை விஷ­வா­யுக் கசி­வுக்கு 11 பேர் பலி­யா­யி­னர்.

இந்த நிலை­யில் நேற்று நள்­ளி­ர­வில் மீண்­டும் ஆலை­யி­லி­ருந்து வாயுக் கசிவு ஏற்­பட்­டது.

இதை­ய­றிந்த ஐம்­ப­துக்­கும் மேற்­பட்ட தீய­ணைப்பு வீரர்­கள் வாயுக் கசிவை கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ள­னர்.

மேலும் மூன்று கி.மீ. சுற்­ற­ள­வில் வசித்­து­வந்த அப்­ப­குதி கிரா­ம­வா­சி­கள் இர­வோடு இர­வாக வெளி­யேற்­றப்­பட்­ட­னர். இத­னால் அப்­ப­கு­தி­யில் பர­ப­ரப்பு காணப்­ப­டு­கிறது. தொழிற்சாலையில் மீண்­டும் வாயுக் கசிவு ஏற்­பட்­ட­தில் யாரும் அதி­க­மாக பாதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை. ஆனால் மக்கள் இன்னமும் அச்சத்திலிருந்து மீளவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!