இந்தியாவில் கொரோனா கிருமிக்கு 1,886 பேர் மரணம்; 56,342 பேருக்கு கிருமித் தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் நேற்று நிலவரப்படி கொேரானா கிருமிக்கு 1,886 பேர் பலியாகிவிட்டனர்.

நாடு முழுவதும் 56,342 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா கிருமிப் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப் படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. இருந்தாலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள தகவலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண் ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் 56,342 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,900 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,886 ஆக அதி கரித்துள்ளது. அதே சமயத்தில் 16,540 பேர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ் டிரா தொடர்ந்து முன்னிலை வகிக் கிறது. அம்மாநிலத்தில் மொத்தம் 17,974 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 694 பேர் பலி யாகியுள்ளனர். குஜராத்தில் 7,012 பேர், டெல்லியில் 5,980 பேர், தமிழ கத்தில் 5,409 பேர். மத்திய பிர தேசத்தில் 3,252 பேர், ராஜஸ்தானில் 3,427 பேர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!