தொடர்ந்து குறைந்து வந்த பாதிப்பு கூடியது: இதுவரை 1.5 மில்லியன் பரிசோதனைகள் பாதிப்பு 62,939; பலி 2,109

புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து சில நாட்களாகக் குறைந்து வந்த கொரோனா கிருமித்தொற்று நேற்று கூடியது. நாட்டில் ஞாயிற்றுக்கிழமை அன்று புதிதாக 3,277 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

இந்த எண்ணிக்கை, கடந்த புதன்கிழமையன்று 3,530 பேராக இருந்தது. வியாழக்கிழமை 3,355 ஆகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை 3,340 ஆகக் குறைந்த எண்ணிக்கை, சனிக்கிழமை 3,083 ஆக மேலும் இறங்கியது. ஆனால் நேற்று புதிதாக 3,277 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் மொத்தம் 62,939 பேரை கொரோனா கிருமி தொற்றி உள்ளது. அவர்களில் 111 பேர் வெளிநாட்டினர். பலி எண்ணிக்கை 2,109 ஆகக்கூடி இருக்கிறது.

கிருமி அறிகுறி தெரியவந்துள்ளோரில் 41,472 பேர் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். 19,357 பேர் குணம் அடைந்துவிட்டனர். நோயாளி ஒருவர் அவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில்தான் ஆக அதிகமாக 779 பேர் பலியாகி இருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 27 பேர் பலியாகிவிட்டனர்.

சீனாவில் இருந்து மருந்துகள் ஏற்றி வந்த மும்பையைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானிகள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குஜராத் (472), மத்தியப் பிரதேசம் (215), மேற்கு வங்காளம் (171), ராஜஸ்தான் (106), உத்தரப் பிரதேசம் (74), டெல்லி (73), ஆந்திரா (44), தமிழ்நாடு (45) ஆகிய மாநிலங்கள் பலி எண்ணிக்கையில் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

இதனிடையே, வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா கிருமி நிலவரம் தொடர்பில் உயர்மட்ட அதிகாரி களுடன் புதுடெல்லியில் கூட்டம் நடத்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், நாட்டில் இதுவரையில் 1.525 மில்லியன் கிருமிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளதாகக் கூறினார்.

அன்றாடம் 95,000 பேரைச் சோதிக்கும் அளவுக்கு ஆற்றல் கூடி இருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், பரிசோதனைகளை 332 அரசு மற்றும் 121 தனியார் ஆய்வுக்கூடங்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வட கிழக்கு மாநிலங்கள் பச்சை மண்டலங்களாக இருப்பதைச் சுட்டிய அவர், கிருமிப் பரவலைத் தடுக்க மக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதையும் புகையிலை மெல்லுவதையும் மாநிலங்கள் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!