தொழிலாளிகள் ஐவர் பலி; 13 பேர் காயம்

போபால்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆந்திராவில் வேலை செய்துகொண்டு இருந்தபோது கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் அவர்களுக்கு வேலை போய்விட்டது. சாப்பிட வழியும் இல்லை, இருக்க இடமும் இல்லை. சொந்த ஊருக்குத் திரும்பவும் முடியவில்லை.

ஆந்திராவிலேயே தவியாய்த் தவித்து வந்த ஊழியர்களில் 20 பேர், கட்டுப்பாடுகள் அகன்றதை அடுத்து, மாங்காய் ஏற்றப்பட்ட லாரியில் ஏறி சொந்த ஊருக்குச் சென்றனர். அந்த லாரி மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்து நரசிங்பூர் என்ற மாவட்டத்துக்குள் சென்றபோது திடீரென்று குடை சாய்ந்துவிட்டது.

மாங்காய்கள் இடையே சிக்கிக்கொண்ட ஊழியர்கள் தப்பிக்க முடியாமல் திணறிவிட்டனர். இந்த விபத்தில் ஐவர் அதே இடத்தில் மாண்டனர். 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் இருவர் நிலை கவலைக்கு இடமாக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைய நாட்களில் மகாராஷ்டிராவில் இருந்தும் தென் பகுதிகளில் இருந்தும் பல வழிகளிலும் உத்தரப் பிரதேசம் திரும்பிய ஊழியர்களில் சுமார் 10 பேர் வழியி லேயே மாண்டுவிட்டனர்.

மகாராஷ்டிராவில் இருந்து மத்தியப் பிரதேசம் சென்றுகொண்டு இருந்த வழியில் ரயிலில் அடிபட்டு 16 பேர் மாண்டதற்கு இரண்டு நாட்கள் கழித்து இந்த மாங்காய் லாரி விபத்து நிகழ்ந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!