திடீர் நெஞ்சு வலி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: திடீர் நெஞ்­சு­வலி கார­ண­மாக முன்­னாள் பிர­த­மர் மன்­மோ­கன்­சிங் டெல்­லி­யில் உள்ள எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்­குத் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

87 வய­தான மன்­மோ­கன்­சிங் விரை­வில் நலம்­பெற வேண்­டு­மென ஒட்­டு­மொத்த இந்­தி­யா­வும் பிரார்த்­திப்­ப­தாக டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் இரவு 8.45 மணிக்கு மன்­மோ­கன்­சிங்­குக்கு திடீர் நெஞ்­சு­வலி ஏற்­பட்­டதை அடுத்து. மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார். இதய நோய்ப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள அவ­ரைச் சிறப்பு மருத்­து­வக் குழு­வி­னர் கண்­கா­ணிக்கின்றனர்.

நாட்­டின் பிர­த­ம­ராக இரு­மு­றை­யும் மத்­திய நிதி அமைச்­ச­ரா­க­வும் ரிசர்வ் வங்கி ஆளு­ந­ரா­க­வும் பதவி வகித்­த­வர் மன்­மோ­கன்­சிங். கடந்த 2009ஆம் ஆண்டு இவருக்கு இதய பைபாஸ் அறு­வைச் சிகிச்சை நடந்தது. 88 வய­தி­லும் உடல்­ந­லத்தை நல்­ல­வி­த­மா­கப் பேணி வந்­தார் மன்­மோ­கன் ­சிங்.

தற்­போது ராஜஸ்­தான் மாநி­லத்­தில் இருந்து மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ராக பதவி வகித்து வரும் அவர், கடந்த வாரம் வரை நடை­பெற்ற பல்­வேறு நிகழ்ச்­சி­களில் காணொளி வசதி மூலம் உற்­சா­கத்­து­டன் பங்­கேற்­றார்.

இந்­நி­லை­யில் அவர் விரை­வில் குண­ம­டைய வேண்­டு­மென இறை­வ­னைப் பிரார்த்­திப்­ப­தாக ராஜஸ்­தான் முதல்­வர் அசோக் கெலாட் கூறி­யுள்­ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், உண்மையான நற்பண்பாளர், பணிவானவர், அறிவாற்றல் மிக்கவர் மன்மோகன் சிங் என டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மன்மோகன்சிங்கின் உடல்நிலை குறித்துக் கேள்விப்பட்டதும் தாம் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!