67 ஆயிரம் பேருக்கு பாதிப்பு: பலி எண்ணிக்கை 2,206 சென்னைக்கு ரயில், விமான சேவை இப்போது வேண்டாம்: முதல்வர் வலியுறுத்து

புது­டெல்லி: கொரோனா கிருமித்­தொற்­றின் தாக்­கம் இந்­தியா முழு­வ­தும் அதி­க­ரித்து வரு­வ­தாக தக­வல்­கள் வெளி­வ­ரும் நிலை­யில், பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 67 ஆயி­ரத்தை கடந்­துள்­ளது. கொவிட் 19 நோய் இது­வரை 2,206 உயிர்­க­ளைப் பறித்­துள்­ளது.

நேற்று நண்­ப­க­லுக்கு முந்­தைய 24 மணி நேரத்­தில், ஒரே நாளில் நாடு முழு­வ­தும் புதி­தாக 4,213 பேருக்கு நோய்த்­தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

மத்­திய சுகா­தா­ரத்­துறை நேற்று வெளி­யிட்­டுள்ள அறிக்­­கை­யில், இது­வரை மொத்­தம் 67,152 பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் 2,206 உயி­ரி­ழந்­தி­ருப்­ப­தா­க­வும் குறிப்பிடப்பட்­டுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வுக்கு அடுத்தபடியாக குஜ­ராத்­தில் இது­வரை 8,194 பேருக்­கும் டெல்­லி­யில் 6,923 பேருக்­கும் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் 3,614 பேருக்­கும் ராஜஸ்­தா­னில் 3,814 பேருக்­கும் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 3,467 பேருக்­கும் கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே நேற்று மாலை மாநில முதல்­வர்­க­ளு­டன் பிர­த­மர் மோடி ஆலோ­ச­னை­யில் ஈடு­பட்­டார். அப்­போது ஊர­டங்கு உத்­த­ரவை நீட்­டிப்­பது குறித்­தும் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­வி­டு­வது குறித்­தும் அவர் மாநில முதல்­வர்­க­ளிடம் கருத்­து­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.

கடந்த ஒன்றரை மாதங்களில் முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஐந்தாவது முறையாக காணொளி வசதி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நேற்றைய ஆலோசனையின் போது பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழகம் கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொண்டு வருவதால் உயிரிழப்போர் விகிதம் 0.67 விழுக்காடாக குறைந்துள்ளது என்றார்.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்று சுட்டிக்காட்டிய அவர், கொரோனா கிருமி பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழகத்துக்கு சிறப்பு நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாயும் மருத்துவ கருவிகள் வாங்க உடனடியாக ஆயிரம் கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த முதல்வர் பழனிசாமி, சென்னையில் கொரோனா கிருமித்தொற்று அதிகரித்துள்ள நிலையில், சென்னைக்கான ரயில், விமான சேவைகளுக்கு மே 31ஆம் தேதி வரை மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

முதல்வர்களிடம் கேட்டறிந்த கருத்துகளின் அடிப்படையில் பிரதமர் மோடி விரைவில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பொருளாதார முடக்க நிலையை அகற்றுவதற்கு ஏற்ப அவரது அறிவிப்புகள் அமைந்து இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!