கொவிட்-19: சென்னையில் அதிகரிக்கும் பாதிப்பு; தமிழகத்தில் ஒரே நாளில் அறுவர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று ஒரே நாளில் 6 பேரைப் பலி வாங்கி உள்ளது.

மாநிலம் முழுவதும் கிருமித் தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 8,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 10 தினங்களில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது என்றும் தமிழகத்தில் நேற்று (மே 11) ஒரே நாளில் புதிதாக 798 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதார அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,002 ஆக அதிகரித்துள்ளது என்றும் கொவிட் 19 நோயிலிருந்து இதுவரை 2,057 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே சென்னையில் கொரோனா கிருமித் தொற்றின் தாக்கம் மேலும் வலுத்து வருகிறது. சென்னையில் கிருமித்தொற்றியோர் எண்ணிக்கை 4,371 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 538 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.

சென்னையில் கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா கிருமி பாதிப்பால் இதுவரை 53 பேர் பலியாகி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் 4 பெண்கள் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!