சமூக இடைவெளியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள பேருந்து

ஹைதராபாத்: பேருந்து பயணங்களின்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஆந்திராவில் பேருந்தின் இருக்கைகள் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. எனவே பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பேருந்து சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் பேருந்து இருக்கைகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக 100 சொகுசு பேருந்துகளில் இருக்கைகள் மாற்றப்பட்டு, சமூக இடைவெளியுடன் 3 வரிசைகளாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 36 இருக்கைகள் கொண்ட பேருந்தில் தற்போது 26 இருக்கைகள் உள்ளன. இந்த திட்ட வடிவம் மற்றும் மாதிரி புகைப்படங்கள் ஆந்திர முதல்வருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவரது முடிவுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஆந்திர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பேருந்துகளுக்கு இணையம் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இதனால் பணமில்லா பரிவர்த்தனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மே 18ஆம் தேதிக்குள் 100 பேருந்துகள் மாற்றி அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கும் என்று கூறுகிறது ஆந்திர போக்குவரத்து துறை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!