விபத்துகளில் மாண்ட வெளிமாநில தொழிலாளர்கள்

பாட்னா: ஒரே நாளில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் சொந்த ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்கள் ஐவர் உயிரிழந்தனர்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் நடந்தோ, சைக்கிளிலோ, தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 26 வயதான சாஹீர் அன்சாரி என்பவர், டெல்லியில் இருந்து பீகாருக்கு சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.

சுமார் 1000 கி.மீ. தூரத்தைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்ல மொத்தம் 8 பேர் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

அப்போது 500 கி.மீ. கடந்து விட்ட நிலையில் அனைவரும் காலை சாப்பாட்டிற்காக இரு சாலைகளின் நடுவே உள்ள மரத்தடியில் அமர்ந்து ஓய்வு எடுத்துள்ளனர்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது. இதில் சாஹீர் அன்சாரி உயிரிழந்தார். நடுவே மரம் இருந்ததால் மற்றவர்கள் உயிர் பிழைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரைக் கைது செய்துள்ளனர். உயிரிழந்த அன்சாரிக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.

இதே போல், மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப் பிரதேசத்தின் ஜனாபூருக்கு ஆட்டோவில் பயணித்த தாயும் மகளும் லாரி மோதி மாண்டனர்.

ஆறு பேர் கொண்ட குழுவில் பயணித்த அவர்கள், 1,300 கி.மீ. தூரம் பயணித்து செல்ல வேண்டிய இடத்தைக் கிட்டத்தட்ட அடைந்திருந்தபோது, லாரி மோதியதில் உயிரிழந்தனர்.

ஹரியானாவில் நடந்த இன்னோர் விபத்தில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது, கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!