பொருளியலை மீட்க இந்தியா யுஎஸ் $266பி. சிறப்புத் திட்டம்

கொரோனா கிருமித்தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவைச் சமாளிக்க யுஎஸ் $266 பில்லியன் (சிங்கப்பூர் வெள்ளி 372 பில்லியன்) ‘தன்னிறைவு இந்தியா’ பொருளியல் மீட்புத் திட்டத்தை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தை மீட்க நேற்றுமுன்தினம் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதியின் சிறப்புத் திட்டங்களை அவர் விவரித்தார்.

அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.200 கோடிக்கு குறைவா ஏலக் குத்தகைகள் இனி வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கிட்டாது. அதை இந்திய நிறுவனங்களே பெறும் .

வாராக்கடனில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேர வேண்டிய அனைத்து தொகைகளும் 45 நாட்களில் வழங்கப்படும்.

ரூ.100 கோடி வரை வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி வரை கடன் இருந்தால், கூடுதல் கடன் வழங்க நடவடிக்கை. ரூ. 20 ஆயிரம் கோடி கடனுதவி திட்டத்தால் 2 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். முதலீடு ரூ. 1 கோடியாக இருந்தாலும் சேவை அளிக்கும் நிறுவனம் சிறு குறுதொழில் நிறுவனமாக கருதப்படும்.

முதலீடு அடிப்படையில் இனி மேல் சிறு, குறு தொழில்கள் வகைப் படுத்தப்படும். சிறு நிறுவனங்கள் இ-மார்க்கெட்டிங் மூலம் பொருட்களை விற்க வசதி செய்து தரப்படும். சிறு, குறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும் என்றும் இத்தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்ததாரர் வங்கி உத்தரவாதம் 6 மாதத்துக்கு நீட்டிப்பு, மின்சார நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி, வங்கி அல்லாத நிதிநிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி, வருமான வரி தாக்கல் செய்ய மேலும் 3 மாத அவகாசம், போன்ற சலுகைகளையும் அவர் அறிவித்துள்ளார்.

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களுக்கு சேமநிதி (பிஎஃப்) தொகையை மத்திய அரசு செலுத்தும். இதற்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3.67 லட்சம் நிறுவனங்கள், 72.25 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். சேமநிதி தொகையை அரசே செலுத்துவதால், நிறுவனங்களுக்கு ரூ.6,500 கோடி மிச்சமாகும்.

ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட கட்டுமானத் திட்டங்களின் பதிவுகாலம் 6 மாதம் நீட்டிக்கப்படும். ஊரடங்கு காலத்தில் முடிக்கப்படாத கட்டுமானப் பணிகளை முடிக்க அவகாசம் அளிக்கப்படும். புதிதாக பதிவு செய்யப்படும் கட்டுமான திட்டங்களுக்கும் பதிவுக்காலம் நீட்டிப்பு பொருந்தும் என்று நிர்மலா கூறினார்.

கொரோனா கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுக்க இதுவரை மூன்று கட்ட ஊரடங்குகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் மே 17 வரை ஊரடங்கு இருக்கும் நிலையில் நாடு முழுக்க கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளியல் மீட்புக்கான சிறப்புத் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!