வாயுக்கசிவு குறித்து விசாரணை நடத்தும் தென்கொரிய குழு

மும்பை: விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு தொடர்பாக விசாரணை நடத்த தென்கொரியாவின் ‘எல்ஜி. பாலிமர்’ நிறுவனம் குழு ஒன்றை அனுப்பி உள்ளது.

எட்டுப் பேர் கொண்ட அந்தக் குழு இந்திய அரசு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச உள்ளது.

விசாகப்பட்டினம் ரசாயன ஆலையை எல்.ஜி. பாலிமர் நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த ஆலையில் அண்மையில் ஏற்பட்ட வாயுக்கசிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். 800க்கும் அதிகமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் 8 பேர் கொண்ட குழுவை எல்.ஜி. நிறுவனம் அனுப்பி உள்ளது. இந்தக் குழுவினர் விரிவாக விசாரணை நடத்தி வாயுக்கசிவுக்கான காரணங்களைக் கண்டறிவர் என்று கூறப்படுகிறது.

மேலும் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை தங்கள் குழுவினர் மேற்கொள்வர் என்றும் எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆந்திர மாநில அரசு ஏற்கெனவே நிவாரணத் தொகை அறிவித்துள்ளது.

இதுவரை இந்த விபத்துக்கான காரணம் குறித்து தெளிவான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில் வாயுக்கசிவு குறித்து ஆலையில் ஆய்வு நடத்த உள்ளது தென்கொரியாவின் எல்ஜி நிறுவனக் குழு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!