'ஆளுக்கு ரூ.10,000 தருகிறோம்; சொந்த ஊருக்கு இப்போது வரவேண்டாம்': மக்களிடம் நாகாலாந்து கோரிக்கை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் இதுவரை யாருக்கும் கொரோனா கிருமி பாதிப்பு இல்லை. இதே நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு விரும்புகிறது.

இந்த சூழலில் மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்கி வருவதையடுத்து, பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள நாகாலாந்துவாசிகள் சொந்த ஊர்களுக்குத் திரும்பலாம் என்றும் அவர்களால் நாகாலாந்தில் கிருமித் தொற்று பரவலாம் என அஞ்சப்படுகிறது.

இதையொட்டி, நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தற்போது திரும்ப வேண்டாம் என்றும் தற்போது வசிக்கும் இடத்திலேயே இருங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ள அம்மாநில அரசு, அவ்வாறு வெளிமாநிலங்களில் தங்குவோரின் வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதுபற்றி நாகாலாந்து தலைமைச் செயலாளர் தெம்ஜென் டாய், “கொரோனா கிருமி பாதிப்பில்லாத மாநிலமாக நாகாலாந்தை தக்க வைப்பது சவால் நிறைந்த காரியமாக இருக்கிறது. இந்த சூழலில் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் மூத்த குடிமக்கள், சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள், மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.

ஆனால், நாகாலாந்து மாநில அரசின் இணையதளத்தில் சொந்த ஊர் திரும்ப விருப்பம் தெரிவித்து 18,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

நாகாலாந்தில் தனிமைப்படுத்தும் வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவை விரிவான அளவுக்கு இல்லாததே மாநில அரசின் இந்த அறிவிப்புக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!