சானியா மிர்சாவின் கவலை

புதுடெல்லி: கொரோனா கிருமி யால் மற்றவர்களைப் போல சானியா மிர்சாவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையான இந்தியாவைச் சேர்ந்த சானியாவின் குடும்பம் கொரோனா கட்டுப்பாடுகளால் இரண்டாகப் பிரிந்துள்ளது.

இந்தியாவின் ஹைதராபாத் நகரில் சானியா மிர்சா மகனுடனும் அவரது கணவர் பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டிலும் தனித் தனியாக சிக்கிக் கொண்டனர்.

இதன் காரணமாக, “என் மகன் எப்போது தந்தையைச் சந்திப்பான்,” என்று சானியா மிர்சா கேட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு ஜனவரியில் சானியா டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பல போட்டிகளில் தொடர்ந்து கலந்து கொண்ட அவர் அமெரிக்கா முடக்கப்படுவதற்கு முன்பாக கிருமித் தொற்றிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்தார்.

பாகிஸ்தானில் பாகிஸ்தான் லீக் போட்டியில் விளையாடிய மாலிக்கும் கொரோனா கட்டுப்பாடுகளால் அங்கிருந்து வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டார்.

“அவர் பாகிஸ்தானிலும் நான் இந்தியாவிலும் சிக்கிக்கொண்டோம். எங்களுக்கு சிறிய வயதில் குழந்தை உள்ளது. எப்போது என் மகன் இஷான் தந்தையைச் சந்திப்பான் என்பது தெரியவில்லை.

“அவருக்கும் 65 வயது தாயாருடன் இருக்க வேண்டிய கட்டாயம். அதையும் புரிந்து கொள்ள முடிகிறது,” என்று சானியா மிர்சா கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!