சுடச் சுடச் செய்திகள்

ஒரேநாளில் 2.39 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்

ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கி தவிக்கும் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர்கள் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பணிகள் கடந்த 1-ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகின்றன.

சிறப்பு ரெயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம் மாநில அரசுகள் பாதுகாப்பாக அவர்களை அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

நேற்று (மே 16) இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 167 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் சுமார் 2.39 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இயக்கப்பட்ட 800 சிறப்பு ரயில்கள் மூலம் 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை, சொந்த மாநிலத்திற்குத் திரும்பியுள்ளனர்.

மே மாதம் முதல் தேதியிலிருந்து 14ஆம் தேதிவரை 800 ரயில்கள் இயக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

ஆந்திரா, பீஹார், சட்டீஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியபிரதேசம், மஹாராஷ்டிரா, மணிப்பூர், மிஸோரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

புலம்பெயர் தொழிலாளர்களை அனுப்பும் மற்றும் அவர்களை திரும்ப பெறும் இருமாநிலங்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.

ரயில் பயணத்திற்கு முன் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

பயணம் செய்த அனைத்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டது. முன்னர் எந்த இடைநிறுத்தமும் இன்றி ஒரு ரயிலில் 1,200 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மே 11 முதல் 1,700 தொழிலாளர்கள் வரை செல்லவும், 3 ரயில்நிலையங்கள் வரை நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

ஒருமுறை ரயில் இயக்குவதற்கு ரூ.80 லட்சம் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான செலவை மத்திய அரசும் மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

முழுமையான செய்தியைப் படிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online