செய்திக்கொத்து (இந்தியா) 18-05-2020

நடைப்பயணமாக ஊர் திரும்புவதை தவிர்க்க அமைச்சர் வேண்டுகோள்

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப்பயணமாக சொந்த ஊர்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டுமென மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டுள்ளார். மாநில அரசுகள் ஒத்துழைத்தால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக நாள்தோறும் 300 ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சு தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார். “பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் தொழிலாளர்களுக்காக ரயில்கள் இயக்கப்படுவதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இவ்விஷயத்தில் மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என பியூஷ் கோயல் வலியுறுத்தி உள்ளார்.


27 நாட்களுக்குப் பிறகு இருவர் பாதிப்பு

இம்பால்: கடந்த 27 நாட்களுக்குப் பிறகு மணிப்பூரில் 4 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் பெண்களாவர். இவர்களில் இரண்டு பேர் மும்பை, சென்னையிலிருந்து மணிப்பூர் சென்றுள்ளனர். மற்றொருவர் கொல்கத்தாவிலிருந்து சென்றுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். முன்னதாக மணிப்பூரில் இருவருக்கு மட்டுமே கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களும் சிகிச்சைக்குப் பிறகு ஏப்ரல் மத்தியில் குணமடைந்தனர்.


பரிசோதனைக்கு உடன்பட மறுப்பு: மோதலில் இருவர் உயிரிழப்பு

போபால்: டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஒருவருக்கு கிருமித்தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்தவேண்டும் என்று ஒருதரப்பினர் வலியுறுத்தியதால் மத்தியப்பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் மோதல் வெடித்தது. சம்பந்தப்பட்டவர், சோதனை செய்துகொள்ள மறுத்துள்ளார். அவருக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் எதிராக ஒருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மோதல் முற்றி அடிதடியில் முடிந்தது. இந்த வன்முறைச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட இருவர் உயிரிழந்தனர்.


பெண் மருத்துவரை வீட்டில் வைத்து பூட்டியவர் மீது வழக்கு

புதுடெல்லி: கொவிட்-19 நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பிய பெண் மருத்துவரை வீட்டுக்குள் அடைத்து வைத்த அண்டை வீட்டுக்காரர் மீது டெல்லி போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் பெண் மருத்துவர் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். இந்நிலையில் அவருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் குணமடைந்தார். அவர் வீடு திரும்பியபோது அண்டை வீட்டில் வசிக்கும் மணீஷ் என்பவர் மருத்துவர் அங்கு வசிக்க அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். தாம் குணமடைந்து விட்டதாக மருத்துவர் கூறியதைப் பொருட்படுத்தாமல் அவரை வீட்டுக்குள் தள்ளி வெளியில் பூட்டிவிட்டார் மணீஷ். இதையடுத்து போலிசார் அம்மருத்துவரை மீட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!